பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஓர் ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவின் பிரான்ஸ் தூதுவர் என்கோசிநாதி இம்மானுவேல் ம்தேத்வா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் சட்டத்தரணி லாரி பெக்குவோ வெளியிட்ட அறிக்கையில், தூதுவர் 22ஆம் மாடியில் உள்ள ஹயட் ரீஜென்சி ஹோட்டலில் ஒரு அறை முன்பதிவு செய்திருந்ததாகவும், அந்த அறையின் ஜன்னல் கத்தரிக்கோலால் திறக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஹோட்டலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காலை 11 மணியளவில் வெளிப்புற முற்றத்தில் அவரது உடலை கண்டு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில், தூதுவரின் மனைவி, திங்கட்கிழமை மாலை கணவர் காணவில்லை என முறைப்பாடு அளித்திருந்தாகவும் அவர் அனுப்பிய ஒரு செய்தியில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டும், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறை ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது எனவும், சம்பவ இடத்தில் மருந்து/மயக்கப்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சம்பவம் தற்போது தற்கொலை எனக் கருதி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

.jpg)