கொழும்பிலிருந்து செவ்வந்திக்கு வந்த அவசர அழைப்பு - திடீரென மாற்றப்பட்ட இரகசிய திட்டம்!!

Editor
0

 நேபாளத்தில் கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மேலதிக விசாரணைகளுக்காக இன்று மித்தேனிய பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.


அவர் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அருணா விதானகமகே எனப்படும் கஜ்ஜாவின் கொலை தொடர்பாகவும் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.


கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள், அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி, கெஹேல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில், தானும் கமாண்டோ சமிந்துவும் மித்தேனிய பகுதியில் தங்கியிருந்ததாக அவர்  பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.


பலர் கைது


எனினும், கெஹேல்பத்தர பத்மே உடனடியாக கொழும்புக்கு வருமாறு அறிவித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒரே நாளில் கொழும்புக்கு வந்ததாகவும், மறுநாள், அதாவது பெப்ரவரி 19 ஆம் திகதி, நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பெப்ரவரி 18 ஆம் திகதி அருணா விதானகமகே என்கிற கஜ்ஜாவைக் கொல்ல பத்மே வண்டியையும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மித்தேனியாவுக்கு அனுப்பியிருக்கலாம் என்று பொலிஸா சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், திடீரென மாற்றப்பட்ட திட்டத்தின்படி, சஞ்சீவவைக் கொல்ல அவர்கள் விரைவாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், 18 ஆம் திகதி கஜ்ஜாவைக் கொல்ல மற்றொரு தரப்பினர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, சஞ்சீவவைக் கொன்றுவிட்டு தப்பிச்சென்ற இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய மொபைல் போனும் கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top