விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பாடகர்!!

Editor
0

 இலங்கையின் முன்னணிப் பாடகரான சாமர ரணவக்க என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


டுபாய்க்கு (Dubai) பயணிக்கவிருந்த சிறீலங்கன் விமானத்தில் இருந்தே இவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  சாமர ரணவக்க அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் ஏறும்போது விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது


கடுமையான வாக்குவாதம்

இதனால் அவர் விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.


.மது அருந்தி மோசமாக நடந்து கொண்ட பாடகரை விமானத்தில் பறக்க அனுமதிக்க முடியாது என்று விமானத்தின் தலைமை விமானி முடிவு செய்துள்ளார்.


இந்த நிலையில் தலைமை விமானி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்



.அதிகாரிகள் விசாரணை

இதனையடுத்து விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபல பாடகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.


தீவிர விசாரனையை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top