யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குற்றச்செயல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அந்த இளைஞனை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் திடீரென ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது அவர் புகையிரத பாதையை கடக்க முயன்ற வேளையில், வேகமாக வந்த ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (7) உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.