ரணில் : மனோ தரப்பு இடையே அவசர சந்திப்பு!!

Editor
0

ஐக்கிய தேசிய கட்சி (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.


இந்த சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


அவசரமாக ஏற்பாடு 

ரணில் விக்ரமசிங்க நாளை ரஷ்யா செல்ல உள்ளதால் இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம் பெற்றதாக கூட்டணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top