போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து குறித்த சாரதி நல்லதண்ணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இரகசிய தகவல்கள்
நல்லதண்ணி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேளையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் இரண்டு போதை வில்லைகள், 77 மில்லி கிரேம் ஹெரோய்ன் என்பன மீட்கப்பட்டன.
இவ்வாறு கைது செய்ய பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியும் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
