“முட்டாள்தனமாகப் பேசினால் விசாரணைக்கு தயாராக இருங்கள்!”
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல்வாதிகள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் கருத்துரைப்பின், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இன்று (06) பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க இதுகுறித்து தெரிவித்தார்:
விமல் வீரவன்சவும் கம்மன்பிலும் முந்தைய அரசாங்கங்களைப் போலவே இதையும் கருதுகிறார்கள். ஆனால் இனி அவர்கள் முட்டாள்தனமாகப் பேச முடியாது. ஆதாரங்களுடன் விசாரணைகள் நடைபெறும்.”அவர் மேலும் கூறினார்.
கம்மன்பில நீண்ட காலமாகவும், விமல் வீரவன்சவும் தொடர்ந்து முட்டாள்தனமான கருத்துகளை வெளியிடுகின்றனர். இதுபோன்றவர்களெல்லாம் இனி விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.”
சமீபத்தில் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.