சிகப்பு சீனி தொடர்பில் அரசாங்கத்தின் தீா்மானம்: கட்டாயமாகும் நடைமுறை!!

Editor
0

  அரச நிறுவனங்களில் சிகப்பு சீனி கொள்வனவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரசாங்க வைத்தியசாலைகள், சிறைச்சாலை திணைக்களம், பொலிஸ் திணைகக்ளம், முப்படைகள் ஆகிய அரச நிறுவனங்களின் உணவு தேவைகளுக்கான கொள்வனவின்போது கட்டாயமாக சிகப்பு சீனி கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வரையறுக்கப்பட்ட லாங்கா சீனி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெலவத்த மற்றும் செவனகல உற்பத்திச் சாலைகளின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் சிகப்பு சீனியின் மொத்த வருடாந்த உற்பத்தி 56 ஆயிரம் மெட்ரிக் தொன் என்பது குறிப்பிடத்தக்கது.வருடாந்த கரும்பு செய்கையின் அளவு அதிகரித்த காரணமாக சீனி உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிகப்பு சீனியின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் பொலிஸ், சிறைச்சாலை திணைக்களம், அரச வைத்தியசாலைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்வனவு செய்யும் நிறுவனங்களில் கட்டாயமாக சிகப்பு சீனி கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சதொச நிறுவனத்தின் ஊடாகவும் சிகப்பு சீனி கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அரசாங்க தகவல் திணை


க்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.


அரசு நிறுவனங்களில் சிகப்பு சீனி கொள்வனவை ஊக்குவிப்பதன் மூலம் சிகப்பு சீனியின் விலையை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top