மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின்கீழ் களமிறங்கவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதல்வர் வேட்பாளராக உத்தேச முதல்வர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது.ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது இவர், யாழ். மாநகர மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.