சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் தற்போது தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது.
இவர்களுடைய திருமணத்தை நடத்திவைக்க ஜனனி மற்றும் பெண்கள் பல போராட்டங்களை எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களுடைய போராட்டத்திற்கு பலன் கிடைத்து, தர்ஷன் - பார்கவி திருமணம் நடைபெற்றது.ஆனால், ஆதி குணசேகரன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். தான் நினைத்தது நடக்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளார்.இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியல் துவங்கியதில் இருந்து இதுவரை 40 வாரங்களை கடந்துள்ளது.