யாழில் பதிவில்லாமல் 13 முதியோர் பராமரிப்பு நிலையங்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Editor
0

 யாழ்ப்பாணத்தில் 13 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அதில் மூன்று நிலையங்கள் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் முதியோர் இல்லங்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் பதிவு செய்யவில்லையெனில், எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி குறித்த இல்லங்கள் இடைநிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில ஊழியர்கள் முதியோர்களுடன் மரியாதையற்ற சொற்களைப் பிரயோகிப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top