மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்றதன் மூலம், இந்திய மகளிர் அணி ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
கபடி உலகக்கோப்பை வென்ற இந்தியா
11 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இதில், லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜேர்மனி மற்றும் உகாண்டா அணிகளையும் அரையிறுதியில் ஈரானையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சீன தைபே அணியை 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்று தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

