கணேமுல்ல சஞ்சீவ கொலை; ஒன்பது முக்கிய குற்றவாளிகள்...36 சந்தேக நபர்கள்!

Author
0

 புதுக்கடை நீதிம்ன்றி வைத்து சுட்டுகொலை செய்யப்பட்ட   கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள் இருப்பது விசாரணைகளில் உறுதியானதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (7) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.


இந்த வழக்கில் மேலும் ஒரு “பி ”அறிக்கையை சமர்ப்பித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையில்,விளக்கமறியலில் இருந்த 5 சந்தேகநபர்கள் பூசா சிறைச்சாலையிலிருந்து ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


 28 முதல் 36 வரையிலான சந்தேக நபர்கள்

அதேவேளை சம்பவத்தின் பதினைந்தாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தப்பிச்செல்ல உதவியதாகக் கூறப்படும் 3 ஆண் சந்தேகநபர்கள் 2 பெண் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.


சம்பவம் தொடர்பாக 9 முக்கிய சந்தேக நபர்களும் 28 முதல் 36 வரையிலான சந்தேக நபர்களாகப் பெயரிடப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top