இந்திய, பாகிஸ்தான் வெடிப்புச் சம்பவங்களினால் இலங்கைக்கு அச்சுறுத்தலா!

Author
0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



இலங்கையின் பாதுகாப்பு

இலங்கையில் புலனாய்வு பிரிவினர் மிகுந்த கூர்மையாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பாக முப்படையினரும் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதி கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top