யாழ் தெல்லிப்பழையில் வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம்!

Author
0

 மாவீரர் தினமான இன்று வலி வடக்கிற்கு உட்பட்ட அனைத்து இறைச்சிக்கடைகள், தனியார் கல்வி நிலையங்களும் பிரதேசசபைத் தீர்மானத்திற்கு அமைய மூடப்படவுள்ளன.


இந்நிலையில் தெல்லிப்பழையிலுள்ள அனைத்து கடைகளையும் பிற்பகல் 2.00 மணியுடன் மூடுவதற்கு தெல்லிப்பழையிலுள்ள வர்த்தகர்கள் முடிவெடுத்துள்ளனர்.


அந்த வகையில் அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்க விட்டும், இறுதி நினைவேந்தல் நிகழ்வுக்காக துயிலுமில்லங்கள், உங்கள் உங்கள் பிரதேசங்களிலுள்ள மாவீரர் நினைவாலயங்களில் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை அனுஸ்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.  



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top