தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் - சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்!

Author
0

 நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை மாற்றும் அறைகள் உட்பட நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நேற்றைய தினம் தீவிர சோதனை உட்படுத்தப்பட்டது.


இராணுவத்தினராலும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினராலும் கடுமையாக ஆய்வு செய்யப்பட்டன.


நாடாளுமன்ற காட்சியகம் இன்று சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் நிகழ்வைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top