முல்லைத்தீவில் மாயமான 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு !

Editor
0

 முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.


காணாமல்போனவரின் சடலம் புதுமாத்தளன் பகுதியில் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள்

மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 28 ஆம் திகதி , அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்திக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையைச் சேர்ந்த 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top