பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்!

Author
0

 சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5 இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


நேற்று அதிகாலை நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினர் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சிறப்பு தேடுதல் நடவடிக்கை

கடற்படை உடனடியாக ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.


இந்தக் கடற்கடையினர் அப்பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


சவாலான வானிலைக்கு மத்தியிலும் ஐந்து உடல்களையும் மீட்க அதிகாரிகள் பணியாற்றியதால், மாலை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்தன என்று அவர் மேலும் தெரவித்தார்.


இந்த ஐந்து கடற்படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top