இலங்கை மக்களுக்காக பெருந்தொகை நிதியை வழங்கியுள்ள ஐரோப்பா வாழ் இளைஞன்!

Editor
0

 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பா வாழ் இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

சுவீடனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தையு, சுவீடன் நாட்டு மக்களின் மூலம் கிடைத்த பணத்தையும் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுவீடனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சமையல் கலைஞரான ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு 

நாட்டு மக்கள் சோகமாக இருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திலிருந்தே
உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உன்னத முயற்சிக்கு சுவீடன் மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

தொலைவில் வாழ்ந்தாலும், தங்கள் தாயக மக்கள் மீதான ஆழமான அக்கறை காரணமாக இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதவி மனப்பான்மை புலம்பெயர் சமூகத்தின் நாட்டுப்பற்று மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top