போதை மருந்து கொடுத்து துயரத்தில் தள்ளப்பட்ட இளம்பெண் – காதலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு!

Editor
0

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருளை கொடுத்து 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.

வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு  வந்த பெண் ஒருவர் சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் விசாரணைகள் பல விடயங்களை குறித்த பெண் வெளிப்படுத்தியுள்ளார். 

பொலிஸார் விசாரணை 

குறித்த பெண் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், காதலன் குறித்த பெண்ணை வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலரையும் குறித்த அறைக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி ஐஸ் குடிக்க வைத்து, மயக்கமடைந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

 கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top