யாழ்ப்பாண மாவட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணம் தொடர்பில் அரச அதிகாரிகள் தவறான தகவல்கள் வழங்கியுள்ளதாக பலரும் சமூகவலைத்தளங்களில் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டை புரட்டி போட்ட டித்வா புயலால் யாழ்ப்பாண மாவட்டம் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்கள் பெரும் அனர்த்த நிலைக்கு முகம் கொடுத்துள்ளது.
25 000 ரூபா வழங்கும் அரசாங்கம்
இந்நிலையில் வீடுகளை துப்பரவு செய்வதற்கு அரசாங்கம் 25 000 ரூபாவை, ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் 14 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்படாத மக்களின் பெயர்களும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும் கரவெட்டி பிரதேச செயலகம் முன்மாதிரியாக செயற்பட்டுள்ள நிலையில், மற்ற பிரதேசங்களில் போலியான தகவல்களை அரச அதிகாரிகள் வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் யாழ் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

