கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஊழியரிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பராமரிப்பு மைய ஊழியரை இலக்கு வைத்து, மூன்று பெண்கள் கொண்ட கும்பல் இந்தத் திட்டமிட்ட திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்தில் ஏறிய மூன்று பெண்கள், திட்டமிட்டபடி ஒருவருக்கு மயக்கம் வந்தது போல் நடித்து ஊழியரின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.
பெண்கள் கொள்ளை கும்பல்
நான்கு மாதக் குழந்தையுடன் பேருந்தில் ஏறிய அந்தப் பெண்கள், ஊழியரின் இருபுறமும் அமர்ந்து கண்காணித்துள்ளனர்.
ஊழியர் இறங்க முயன்ற போது, ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தது போல் நடித்து பேருந்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மற்றொரு பெண் மயக்கம், மயக்கம் எனக் கத்தி ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய போது, சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
ஊழியரின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க நகையை அறுத்துக்கொண்டு, அக்கும்பல் வேகமாக பேருந்திலிருந்து இறங்கியது.
பின்னால் தயாராக இருந்த முச்சக்கர வண்டியில் ஏறி, குழந்தையுடன் அந்தப் பெண்கள் கும்பல் தப்பிச் சென்றது.
இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், மிரிஹான தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

