அனர்த்தத்திற்குள்ளான பகுதிகளிலுள்ள வீடுகளில் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Editor
0

 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை எவரும் வீடுகளுக்குள் செல்லக் கூடாதென தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மூத்த விஞ்ஞானி வசந்த சேனாதீர அறிவித்துள்ளார்.


உரிய அதிகாரிகள் வந்து சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்து முடிவுகளை வழங்கும் வரை வீடுகளுக்குள் நுழையக்கூடாது என அவர் கூறியுள்ளார்.


தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பொது மக்களுக்கு எச்சரிக்கை 

மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். அவ்வாறானவர்கள் தொடர்ந்து முகாம்களில் தங்கியிருக்க வேண்டும் என வசந்த சேனாதீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.



7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் வெளியேற்றும் சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



இடிந்து விழும் வாய்ப்பு

கனமழை பெய்யும் ஒவ்வொரு இடமும் தண்ணீரில் நிரம்பியிருப்பதால், அடுத்த சில நாட்களில் கூட நிலச்சரிவுகள், பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் இடிந்து விழும் வாய்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






தரையில் இருந்து ஏதேனும் அசாதாரண ஒலிகள் கேட்டாலும், நீர் ஆதாரங்கள் இல்லாமல் போகும் அறிகுறிகள் தென்பட்டாலும், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top