நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று (28) அன்று கைது செய்யப்பட்டனர்.
பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
