பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு!

Editor
0

 இத்தாலியிலுள்ள தேசிய பூங்காவில் பழமையான டைனோசரின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


210 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த டைனோசரின் கால்தடங்களை நோக்கும் போது சிறிய தலை, நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது.


தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தவை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது 

இந்த இனம் புரோ-சௌரோபாட் (prosauropods) என்று அழைக்கப்படுகிறது. கால்தடங்கள், விரல் மற்றும் நகத்தின் அடையாளங்கள் தெளிவாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெல்வியோ தேசிய பூங்காவில் (Stelvio national park) உள்ள ஒரு மலைச் சரிவில் இந்த கால்தடங்கள் கடந்த செப்டெம்பரில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட ஒரு புகைப்படக் கலைஞரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுமார் 10 மீட்டர் உடல் நீளம் கொண்ட "ப்ரோ-சௌரோபாட்" (prosauropods) டைனோசர்கள், நீண்ட பயணங்களின் போது சோர்வைப் போக்க தங்கள் பின்னங்கால்களைப் நடக்கவும், மலைகளில் ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டைனோசர்கள் அழிந்து போவதற்கு முன்பு 160 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top