நிவாரண கொடுப்பனவு; பொதுமகனுக்கு யாழ் கிராம சேவகர் கொலை மிரட்டல்!

Editor
0

   யாழ்ப்பாணம் , மருதங்கேணி நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன.



தொலைபேசியில் கொலை மிரட்டல்

வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.


இந்நிலையில் கிராமத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர்கோவில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசியில் , 'ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மறுபடியும் வாபஸ் வாங்குமாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top