முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்பான பல மோசடிகளை ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து மற்றும் செல்லுப்படியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யும் போதே ஓஷல ஹேரத் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
டயனாவின் சோசடிகள்
அது தொடர்பில் மேலும் கருத்து கூறிய அவர்,
பிரிட்டிஷ் நிறுவனத்திலிருந்து அவர் கையொப்பமிட்ட பல கடிதங்களை கண்டுபிடித்தேன், அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதை உறுதிப்படுத்தினேன்.
மேலும் ஜூலை 14, 2016 முதல் ஜூலை 16, 2017 வரை செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்தார். அரசியல் காரணங்களுக்காக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்ததாகக் கூறப்பட்டதை மறுப்பதாகவும் கூறினார்.
அவருக்கு எதிராக மட்டுமல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மீதும் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். டயனா இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றினார்,
ஆனால் அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதால், அத்தகைய பதவியை வகிக்க அவருக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
