கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

Editor
0

தற்போது நிலவும் இயற்கை அனர்த்த நிலைமையையும் மற்றும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படவுள்ள ரூபா 5,000 போஷாக்கு கொடுப்பனவு இன்று (16) முதல் வழங்கப்படவுள்ளது.

இந்த போஷாக்கு கொடுப்பனவை அடையாளப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.


 அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த கொடுப்பனவு, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top