கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு,சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
