சுனாமி மற்றும் பல்வேறு பேரிடர்களில் மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
35,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட சுனாமி ஏற்பட்டு இன்று (26.12.2025) 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. மரணித்தவர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் "தேசிய பாதுகாப்பு தினத்தின்" முக்கிய நினைவு தினம் இன்று காலை காலியில் உள்ள "பரலிய சுனாமி நினைவுச்சின்னத்தில்" நடைபெறுகிறது.
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்
இந்த ஆண்டுக்கான "தேசிய பாதுகாப்பு தினம்" நிகழ்வுக்காக, டித்வா சூறாவளியால் நாட்டில் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் மத அனுஷ்டானங்களும் நடைபெறுகிறது.
இந்தப் பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
