பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக அமெரிக்கா இன்று இரண்டு விமானங்களை வழங்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா இரண்டு C1 30 சரக்கு விமானங்களை வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடர் மேலாண்மைக்காக அமெரிக்கா பல ஹெலிகப்டர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல சர்வதேச அமைப்புகள்
மோசமான வானிலையால் இலங்கையில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல சர்வதேச அமைப்புகள் உதவ வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல நாடுகளின் அதிகாரிகள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பல உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு வருகைத்தற்து நாட்டிற்கு பொருத்தமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
