விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்!

Editor
0

 அண்மையில் நாட்டைத் தாக்கிய தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி விவசாய அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீட்டு தொகைகளை வழங்கும் நடவடிக்கை முழுமையாக்கப்படும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளாா்.


கடந்த கால இயற்கை அனர்த்தங்களின் காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களில் சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட நிலங்களில் மீளவும் விவசாய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த பருவத்திலிருந்து சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய ஆண்டிலிருந்து விதை நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top