026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகியது.
அது 6 நாட்கள் நீடித்ததுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்றது.
மூன்றாவது வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
விவாதத்திற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இரண்டு நாட்கள் விவாதத்தை நடத்த முடியவில்லை.
இதன்படி, இன்று விவாதம் நடைபெற்று, பின்னர் பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
