இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக குறித்த அதிகாரசபையின் துணைப் பணிப்பாளர் இந்திக பண்டார கூறியுள்ளார்.
இலங்கையின் நிலவரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தற்போது 357,000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.
இருப்பினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.
நேற்று (25.12.2025) உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,479 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், கிறிஸ்துமஸுக்குப் பிறகு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
