யாழ்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான சாலையில்
வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலம் இந்திய இராணுவ பொறியியல் அணியினரால் புனரமைக்கப்படுகின்றது.
இப்பணியினை பார்வையிடுவதோடு மேலதிக உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்கான கள விஜயமாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் பயணம் அமைந்திருந்தது.
வெள்ளம் மற்றும் அழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தொடங்கிய
Sagar Bandhu' ஒரு மனிதாபிமான உதவி நடவடிக்ககையின் ஒர் அங்கமாக இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
அந்த வகையில் கடந்த 7 ம் திகதி
கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய ராணுவ பொறியியலாளர் மேஜர் ANGAD SING GURM தலைமையிலான இந்திய இராணுவ பொறியியல் குழுவினர்
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் அமைந்திருந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை புனரமைப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
அந்த வகையில் நேற்றைய தினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாலத்தினை பொருத்துவதற்கான வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
இந்திய இராணுவ பொறியியல் குழுவினருக்கு உதவியாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி.

