உண்மையை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை!

Editor
0

 அம்புலுவாவ மலையில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை அம்பலப்படுத்தியதற்காக கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.


அம்புலுவாவ அறக்கட்டளை நிதியத்தின் மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸ் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பொலிஸ் அனுப்பிலுள்ள அழைப்பாணை கடிதத்தில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், முறைப்பாட்டாளர் யார் அல்லது தவறான தகவல் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை என்று பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தன கூறுகிறார்.


கம்பளை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இது குறித்து விசாரித்தபோது, ​​முறைப்பாடு என்ன என்பதை அறிய பொலிஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், பொலிஸார் தனிநபர்களை அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய சுற்றறிக்கையை பத்திரிகையாளர் விளக்கிய பின்னர், இது "அவமதிப்பு" அடிப்படையிலான புகார் என்றும், அவமதிப்பு ஒரு குற்றவியல் குற்றம் அல்ல என்றாலும், ஒரு அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று பொலிசார் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top