தமிழகத்தின் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திய மாணவிகள் அறுவர் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவிகள் மதுபானம் அருந்தும் காணொளி வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதோடு பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
