புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி; வாழைச் சேனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னனி!

Editor
0

ட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,


புட்டு கேட்டதால்   வாக்குவாதம்

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தச் சம்பவம் உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது, கணவர் கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்க முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து மனைவி தற்காப்புக்காகப் பதிலுக்குத் தாக்கியதில் அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக இரவு வீட்டை விட்டு வெளியேறி, நேற்று காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார்.

அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழைச்சனை, வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சனை வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு வாழைச்சனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top