திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் கொடுத்த ஷாக் ; அதிர்ச்சியில் குடும்பம்

Editor
0

 இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து திருமணம் நடந்த மூன்றே நாட்களில் மணப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் புது மாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


நாமக்கல் மாவட்டத்தில் ஸ்ரீதர், மகாஸ்ரீ இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் நட்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.


இன்ஸ்டாகிராமில் காதல்  

தம்பதியர் தங்களது  இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண நிகழ்ச்சி விழா போட்டோ, வீடியோக்களை பதிவிட்டனர்.


இதனிடையே, மகா ஸ்ரீ, இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த, முதல் கணவரின் உறவினர்கள், புதுமண தம்பதியரை தீவிரமாக தேடி  மாப்பிள்ளை வீட்டாருக்கு காரில் வந்து புதுப் மணப்பெண் மகாஸ்ரீ யை சரமாரியாக தாக்கினார்.

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்தும், தனது வயதை குறைத்து கூறி ஏமாற்றி திருமணம் செய்தது அம்பலமானது.


மேலும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகாஸ்ரீ யின் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்து வரும் இரு குழந்தைகளையும், முதல் கணவரின் உறவினர்கள் பொலிஸில் ஒப்படைத்தனர்.


 இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதர் குடும்பத்தினர், புதுப் மணப்பெண் மகா ஸ்ரீ ஏற்றுக்கொள்ள மறுத்து, கட்டிய 5 பவுன் தாலி கொடியை திரும்ப பெற்றுக் கொண்டனர். 


 இந்நிலையில் அப்பகுதியினர், வந்த நபர்களிடம் விசாரித்தபோது கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகா ஸ்ரீ, திருமணம் ஆனதும், மேலும் 15 வயதில் பெண் குழந்தையும், 13 வயதில் ஆண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top