நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் , இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாக இன்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து இன்று மாலை அவர் நாட்டிலிருந்து புறப்பட்டு இந்தியாவிற்குச் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
