டித்வா சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ்

Editor
0

 டித்வா சூறாவளியினால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பை பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் மாவட்டங்கள்

இந்த வர்த்தமானி அறிவிப்பு கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டது.


மேற்கூறிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும் நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டு 19 ஆம் எண் இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி 11 இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 நவம்பரில் 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 'தேசிய பேரிடர் பகுதிகள்' என்று அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top