நயினாதீவு பௌத்த பிக்குகள் தையிட்டிக்கு விஜயம்!

Author
0

  யாழ்ப்பாணம் - நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.


இதன்போது பௌத்த பிக்குகள் அங்குள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதியிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.


கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பௌத்த பிக்குகள் குழுவானது அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top