இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரை சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் (05) மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கிய பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜிம்ஸ்ரிக் அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினரே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பிவைக்காததால் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமாக படகில் செல்லல்
தம்மோடு தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும், தம்மிடம் படகில் செல்வதற்குரிய போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

