16 வயது மகளின் நினைவாக தந்தை 47 பேருக்கு 4.5 ஏக்கர் காணி பகிர்வு – இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி !!!

Author
0

எம்பிலிபிட்டியவில் , தனது 16 வயது மகளின் நினைவாக ஒரு தந்தை பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.எம்பிலிபிட்டிய, கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி (W.A. Kalyanasiri) என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

லக்சுமி பூமி' என  பெயரிடப்பட்டுள்ள கிராமம் 

இந்நிலையில் தனது மகளின் நினைவாக , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக இந்த கிராமத்திற்கு 'லக்சுமி பூமி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, தஹராவ போன்ற பிரதேசங்கள் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டபோது, அங்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற கல்யாணசிறி அங்குள்ள மக்களிடம் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்தார்.

இயற்கை அனர்த்த அபாயம் இல்லாத எம்பிலிபிட்டிய பகுதியில் காணி வழங்கத் தயாராக இருக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் வந்து குடியேறலாம்" என அவர் விடுத்த அழைப்பையேற்று பல குடும்பங்கள் தற்போது அங்கு குடியேறி வருகின்றதாக கூறப்படுகின்றது.இதுவரை 4.5 ஏக்கர் காணி 47 நபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா சில பேர்ச் காணிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. காணி மட்டுமன்றி, விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம் மற்றும் பொது மண்டபம் போன்ற வசதிகளுக்காகவும் காணியில் ஒரு பகுதியை அவர் ஒதுக்கியுள்ளார்.

குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான நீர் வசதியையும் அவரே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், .தற்போது குடியேறியுள்ள மக்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் காணி தானம் வழங்கியவர் கூறுகையில்,இயற்கை அனர்த்தங்களால் காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்களானால், இதற்கு அருகிலுள்ள மேலும் 4.5 ஏக்கர் காணியையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.                                                                                                          இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் இரண்டு மின்சார விநியோக மார்க்கங்கள் காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி, பிரதமர் அல்லது மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top