நாளை (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழைபிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, ஊவா, சபரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.மேலும் மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும். எனவே பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

