ஹட்டன் வீடொன்றில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகையினை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரால் களவாடப்பட்ட 9 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஹட்டன் யுலிபீலட் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயது மதிக்க தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து அவர் திருடியதாக குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடபான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

