பாடசாலைக்கு தனது மகனின் விடுகைப்பத்திரம் பெற சென்ற தந்தை , அதிபர் மற்றும் காவலாளியின் தாக்குதலில் மருத்துவமனையில் அனுப்மதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலையில் இயங்கும் தனியார் பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கழுத்தில் அடிபட்டு தந்தை வைத்தியசாலையில்..
தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கும் பாடசாலை ஒன்றில் தரம் 09 கல்வி கற்கும் தனது மகனை வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பாடசாலைக்கு சென்றுள்ளார்.இதன்போது மாணவனின் தந்தைக்கும், பாடசாலை அதிபர் மற்றும் காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து மாணவனின் தந்தை தாக்கப்பட்டு, கழுத்தில் அடிபட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளனர்.அத்தோடு பாடசாலை நிர்வாகமும். குறித்த தந்தை தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாடு செய்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.