சமூக வலைத்தளங்களை பயன்படுத்திய சிறுவர் துஷ்பிரயோகம் | காவல்துறை விசாரணை தீவிரம் !!

Editor
0

கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில், மேலும் பலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

السعودية: ترحيل 4 شقيقات يمنيّات إلى والدهن المعنَّف في اليمن مقامرة خطيرة بمصيرهن

வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் 

கண்டியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பேராதனைப் பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்யும் பிரதான சந்தேகநபரும், பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகச் சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதோடு, மேலதிக வகுப்புகளை இலக்கு வைத்துச் செயற்பட்டுள்ளனர்.

சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை இரகசியமாகப் பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள், அந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, அவர்களைத் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்களுடன் மேலும் ஐந்து பேர் தொடர்புடையதாகத் தெரியவந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் சந்தேகநபர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் இருப்பார்களானால், அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top