கிளிநொச்சி, தேராவில் பகுதியில்இன்று அதிகாலை 12.45 மணியளவில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான குறித்த வாகனத்தை சோதனைநோக்கோடு தடுத்து நிறுத்த முற்பட்ட வேளை நிற்காமல் பயணித்ததால் அதனை துரத்திச்சென்று பின்புறமாக சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டையடுத்து வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பி ஓடியதாகவும் வாகனத்தின் பின்பக்கம் மற்றும் டயர் சேதமடைந்ததாகவும் தெரியவருகிறது.
அதேவேளை யாழில் நிற்காமல் சென்ற வாகனம் மீது பொலிஸார் துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞன் உயிரிழந்தை சர்ச்சைஅயி ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


