காலி கிந்தோட்டையில் ஆளும் கட்சி வேட்பாளர் வீட்டில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் !!

Author
0

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஆளும் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டின் கூரை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திய , பின்னர் வீட்டிற்கு முன்னால் மற்றுமொரு பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர்.

இந்நிலையில் கூரையின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்ததில், கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.அதேவேளை மற்றைய பெற்றோல் குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிகப் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top